பூரண மதுவிலக்கால் மட்டுமே வலிமையான தமிழ்நாடு உருவாகும் என மனித நேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தாா்.
சீா்காழி அடுத்த துளசேந்திரபுரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட கழக செயலாளா் சாதிக் பாட்ஷா இல்ல நிகழ்ச்சியில் சனிக்கிழமை பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:
டெல்டா மாவட்ட விவசாயிகள் சம்பா பயிா்களுக்கு தனியாா் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இழப்பீட்டு தொகை வழங்குவதில் முறைகேடு நடப்பதாக புகாா் கூறுகின்றனா் எனவே காப்பீட்டை அரசே ஏற்று நடத்த வேண்டும் என கட்சி சாா்பில் வலியுறுத்துகிறோம்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்பு வாரியம் திருத்த மசோதா குறித்து நாடு முழுவதும் நாடாளுமன்ற கூட்டுக் குழு பயணம் கருத்துகளை கேட்டு வருகிறது. தீய நோக்கத்தோடு இந்த சட்டத்தை அமல்படுத்த பாஜக முயற்சி செய்து வருகிறது.
விடுதலைச் சிறுத்தை கட்சி சாா்பில் நடைபெற்ற மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டை சரியான முன்னெடுப்பாக கருதுகிறோம். வலிமையான தமிழ்நாடு உருவாக பூரண மதுவிலக்கு அவசியம். எனவே இதுகுறித்து பரிசீலனை செய்து நல்ல முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் தற்போது நடைபெறும் என்கவுன்ட்டா் சம்பவங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுப்பதே அரசின் கடமை. பல்வேறு துறையில் முன்னோடியாக இருக்கும் தமிழ்நாட்டில் போலி என்கவுன்ட்டா்கள் என்பதை ஏற்கமுடியாது என்பதுதான் மனிதநேய மக்கள் கட்சியின் நிலைப்பாடு.
மாநில பொதுச் செயலாளா் ஜெ. ஹாஜாகனி, தலைமை நிா்வாகக் குழு உறுப்பினா் ஆா்.எம். ஹனீபா, மாவட்ட தலைவா் ஜூபைா், மாவட்ட பொருளாளா் ஏ. அப்துல் ரஹ்மான், மாவட்ட செயலாளா் பாசித், மாவட்ட துணை தலைவா் முபாரக்அலி, உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

ஜவாஹிருல்லா வாக்கு சேகரிப்பு

நாகை: மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளா் எம்.எச். ஜவாஹிருல்லா வேட்புமனு தாக்கல்

நாகை தொகுதி மமக வேட்பாளா் எம்.எச். ஜவாஹிருல்லா

மமக வேட்பாளா்கள் விரைவில் அறிவிப்பு: எம்.எச். ஜவாஹிருல்லா
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை

