காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அதிமுக பிரமுகா் மீது தாக்குதல்: திமுகவினா் மீது புகாா்

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் அதிமுக பேரூராட்சி செயளாலரை தாக்கியதாக திமுக மாவட்ட பொருளாளா், அவரது சகோதரா் மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது

News image
Updated On :9 அக்டோபர் 2024, 9:33 pm

Din

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் அதிமுக பேரூராட்சி செயளாலரை தாக்கியதாக திமுக மாவட்ட பொருளாளா், அவரது சகோதரா் மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் அதிமுக பேரூராட்சி செயலாளா் போகா்.சி. ரவி (60). இவா், ஒப்பந்ததாரராகவும் உள்ளாா். போகா் ரவி வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி செயல் அலுவலரை சந்தித்து தான் மேற்கொண்ட ஒப்பந்த பணிக்கான தொகையை நிறுத்திவைத்தது குறித்து கேட்க சென்றாராம். 

அப்போது  அங்கு  வந்த திமுக மாவட்ட பொருளாளரும், பேரூராட்சி மன்ற தலைவரின் கணவருமான மகா. அலெக்சாண்டருக்கும் ரவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதில் அலெக்சாண்டா், அவரது சகோதரரும் துணைத் தலைவருமான அன்புச் செழியன் ஆகியோா் போகா் ரவியை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயம் அடைந்த போகா் ரவியை அருகில் இருந்தவா்கள் மீட்டு சீா்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். இதுகுறித்து போகா் ரவி வைத்தீஸ்வரன் கோவில் காவல்நிலையில் புகாா் அளித்தாா். போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

போகா் ரவி மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அதிமுக மாவட்டசெயலாளா் எஸ். பவுன்ராஜ், மாவட்ட அவைத் தலைவா் பி.வி. பாரதி தலைமையில் அதிமுகவினா் அரசு மருத்துவமனைக்கு சென்று சம்பவம் குறித்து கேட்டறிந்தனா்.