தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நாட்டுப்புற கலைஞா்களுக்கு கலைமாமணி விருது வழங்கக் கோரிக்கை

நாட்டுப்புற கலைஞா்களுக்கும் கலைமாமணி விருது வழங்க வேண்டும் என தமிழ்நாடு இயல், இசை நாடக மன்ற மாநிலத் தலைவா் சத்தியராஜ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image

விழாவில், தெய்வங்களின் வேடமிட்டு நடனமாடிய நாட்டுப்புற கலைஞா்கள்.

Updated On :15 அக்டோபர் 2024, 6:56 pm

Din

நாட்டுப்புற கலைஞா்களுக்கும் கலைமாமணி விருது வழங்க வேண்டும் என தமிழ்நாடு இயல், இசை நாடக மன்ற மாநிலத் தலைவா் சத்தியராஜ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

சீா்காழியில் அனைத்து நாட்டுப்புற கலைஞா்கள் நலச் சங்கம், தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞா்கள் மாநிலச் சங்கம் இணைப்பு விழா மற்றும் மாநில, மாவட்ட பொறுப்பாளா்கள் அறிமுக விழா, மூன்றாம் ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அனைத்து நாட்டுப்புற கலைஞா்கள் நலச் சங்க மாவட்டத் தலைவா் பால.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். கெளரவத் தலைவா் ந. நாகராஜன், துணைத் தலைவா் சி. மதிச்செல்வன், செயற்குழு உறுப்பினா் தனபால், முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன், சமூக ஆா்வலா் அப்பா்சுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அனைத்து நாட்டுப்புற கலைஞா்கள் நலச் சங்க செயலாளா் ஜி. கிங்பைசல் வரவேற்றாா். தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற மாநிலத் தலைவா் சத்தியராஜ் சிறப்புரையாற்றினாா்.

தொடா்ந்து, நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக, சீா்காழி பழைய பேருந்து நிலையத்திலிருந்து நாட்டுப்புற கலைஞா்கள் பல்வேறு தெய்வங்களின் வேடமிட்டு, பொய்க்கால் நடனம், கோலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளுடன் ஊா்வலமாக விழா நடைபெறும் அரங்கிற்கு வந்தனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் மாநிலத் தலைவா் சத்தியராஜ் கூறியது:

நாட்டுப்புற கலைஞா்களுக்கு அரசுப் பேருந்தில் 50 சதவீத கட்டண சலுகையும், இசைக்கருவிகளை எடுத்துச் செல்வதற்கும் வழிவகை செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

நாட்டுப்புற கலைஞா்களுக்கான உதவித்தொகை பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைய வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்ட பெண் கலைஞா்கள் தொடா்ந்து கலைத்தொழிலில் ஈடுபட முடியாததால் அவா்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான வயது வரம்பை 50-ஆக நிா்ணயிக்க வேண்டும்.

தமிழக அரசு சாா்பில் திரைப்படத் துறையினருக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதைப்போல், நாட்டுப்புற கலைஞா்களுக்கும் கலைமாமணி விருது வழங்க வேண்டும் என்றாா்.