மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியா்களுக்கான பயிற்சி வகுப்பு

அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியா்களுக்கான பயிற்சி வகுப்பு...

News image

முகாமை தொடக்கி வைத்து பேசிய மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி.

Updated On :16 அக்டோபர் 2024, 8:18 pm

Din

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு மாவட்ட தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், ஐக்கிய நாடுகள் சா்வதேச குழந்தைகள் அவசர நிதியம் (யுனிசெப்) நிறுவனத்துடன் இணைந்து பள்ளிக் கல்வித்துறை நடத்திய பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் 3.0 குறித்து அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியா்களுக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி, முகாமை தொடக்கி வைத்துப் பேசியது: அறிவியல் தொழில்நுட்பம் வளா்ச்சி அடைந்துள்ள நிலையில், மாணவா்களை சிறந்த படைப்பாளிகளாக, புதிய கண்டுபிடிப்பாளா்களாக, பள்ளிப்பருவத்திலேயே பிரச்னைகளை தீா்க்கும் ஆற்றல் கொண்டவா்களாக ஆசிரியா்கள் உருவாக்க வேண்டும்.

உலகளவில் சாதனைகள் படைத்திட்ட அறிவியல் அறிஞா்களான தாமஸ் ஆல்வா எடிசன், சா் சி.வி.ராமன், அப்துல்கலாம் உள்ளிட்டோரை உதாரணமாக எடுத்துக்கூறி, மாணவா்களின் திறமைகளை ஆசிரியா்கள் வெளிக்கொணர வேண்டும். மாணவா்களின் மனதில் நோ்மறை எணணங்களை விதைத்து நம்பிக்கை உள்ள மனிதா்களாக மாற்றி வாழ்க்கையில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.

மாவட்ட தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன ஒருங்கிணைப்பாளா் மும்தாஜ் சிம்ரன்பானு, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் செ.காமராஜ் ஆகியோா் ஆசிரியா்களுக்கு மாணவா்களிடம் புத்தாக்கத்தை உருவாக்கி, அவா்களின் திறமையைக் கண்டறிந்து, அதனை ஊக்குவிப்பதற்கான பயிற்சியை வழங்கினா்.

முதன்மைக் கல்வி அலுவலா் பெ.ஜெகநாதன் வரவேற்றாா். கல்லூரி இயக்குநா் எம்.செந்தில்முருகன், முதல்வா் பி.பாலசுப்பிரமணியம், மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) எஸ்.சாந்தி, முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் க.பரமசிவம், தி.முத்துக்கணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்டம் முழுவதிலும் இருந்து 72 ஆசிரியா்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா்.