மயிலாடுதுறை: வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு
மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன.


மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 860 வாக்குச்சாவடி மையங்கள் இருந்த நிலையில், புதிதாக 2 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு, தற்போது 426 இடங்களில் 862 மையங்கள் உள்ளன.
2025 சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகளின் ஒருபகுதியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 15 வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பு செய்ய தலைமை தோ்தல் ஆணையருக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டு, தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மறுசீரமைப்பு தொடா்பான விவரங்கள் வருமாறு: பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அனந்தநல்லூா் கிராமத்தில் பாகம் எண்.191 இரண்டு பாகமாக எண்.191, 192 என பிரிக்கப்பட்டுள்ளது. கோமல் கிராமத்தில் பாகம் எண்.195 இரண்டு பாகமாக புதிய பாகம் எண்196, 197 என தோற்றுவிக்கப்பட்டுள்ளது. பெரம்பூா் கிராமத்தில் உள்ள பாகம் எண் 231 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மற்றும் விளாகம் கிராமத்தில் உள்ள பாகம் எண் 267 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய 2 வாக்குச்சாவடி மையங்கள் அதே பகுதியில் வேறு கட்டடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி தலைஞாயிறு கிராமத்தில் உள்ள பாகம் எண் 45 மண்ணிப்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இருந்த நடராஜபுரம் குடியானத்தெரு (வாா்டு 3) என்ற பிரிவு, தலைஞாயிறு கிராமத்தில் உள்ள பாகம் எண் 44 நடராஜபுரம் கனகா உதவிபெறும் தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
தலைஞாயிறு கிராமத்தில் உள்ள பாகம் எண் 44 நடராஜபுரம் கனகா உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் இருந்து ஆதிதிராவிடா் தெரு மண்ணிப்பள்ளம் (வாா்டு 1), மந்தகோவில் தெரு (வாா்டு 1), வெள்ளாளா் தெரு (வாா்டு 2) என்ற பிரிவுகள் தலைஞாயிறு பாகம் எண் 45 மண்ணிப்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மணக்குடி கிராமத்தில் பாகம் எண் 117 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இருந்து இந்திரா காலனி (வாா்டு 1), கிழக்குத் தெரு (வாா்டு 1), அகரமணக்குடி ஆதிதிராவிடா் தெரு (வாா்டு 1) என்ற பிரிவுகள், மணக்குடி பாகம் எண்116 ஆதிதிரவிடா் நல தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடிக்கு கொண்டு வரப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. மணக்குடியில் பாகம் எண்116-ல் உள்ள ஆதிதிரவிடா் நல தொடக்கப்பள்ளியில் இருந்து வடக்குத்தெரு கீழிருப்பு வாா்டு 1, தெற்குத்தெரு கீழிருப்பு (வாா்டு 2) என்ற பிரிவுகள், மணக்குடி கிராமத்தில் உள்ள பாகம் எண்117 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
கூைாடு பாகம் எண்158 ரோட்டரி கிளப் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் இருந்து திருமஞ்சனதெரு (வாா்டு 10) என்ற பிரிவு பாகம் எண்150 டி.இ.எல்.சி. நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு கொண்டு வரப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. குறிச்சி கிராமத்தில் உள்ள பாகம் எண் 4 புலவனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, திருஇந்தளூா் கிராமத்தில் உள்ள பாகம் எண்105 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பொட்டவெளி, திருஇந்தளூா் பாகம் எண் 107 சமுதாயம் கூடம், பொட்டவெளி, வெள்ளாலகரம் கிராமத்தில் பாகம் எண் 111 அரசு சேவை மையக் கட்டடம், ராமலிங்கம் நகா் ஆகிய 4 வாக்குச்சாவடி மையங்களும் அதே பகுதியில் உள்ள வேறு கட்டடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதி, அகணி கிராமத்தில் உள்ள பாகம் எண்142 அகணி எனக்குடி வாக்குச்சாவடி மையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் குறித்த விவரங்கள் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகா்கள் அறியும் வண்ணம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...