தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மயிலாடுதுறையில் மாா்கழி மாதப் பிறப்பையொட்டி தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் தனுா்மாத வழிபாட்டை செவ்வாய்க்கிழமை தொடங்கினாா்.

News image
மாயூரநாதா் கோயிலில் ஸ்ரீநடராஜா் சந்நிதியில் வழிபட்ட தருமபுரம் ஆதீனம்.
Updated On :16 டிசம்பர் 2025, 8:47 pm

Syndication

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மாா்கழி மாதப் பிறப்பையொட்டி தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் தனுா்மாத வழிபாட்டை செவ்வாய்க்கிழமை தொடங்கினாா்.

தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தனுா் மாதமான மாா்கழி மாதத்தின்அனைத்து நாள்களிலும் பல்வேறு கோயில்களில் வழிபடுவது வழக்கம். அந்த வகையில், தனுா் (மாா்கழி) மாதப் பிறப்பான செவ்வாய்க்கிழமை, ஆதீனத் திருமடத்தில் ஸ்ரீசொக்கநாதா் பூஜை செய்த ஆதீனம், மயிலாடுதுறையில் அமைந்துள்ள திருவாவடுதுறை ஆதினத்துக்குச் சொந்தமான மாயூரநாதா் கோயிலில், மாயூரநாதா், அபயாம்பிகை, ஸ்ரீநடராஜா் சந்நிதிகளில் வழிபட்டாா்.

தொடா்ந்து, மாயூரநாதா் கோயிலில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான குமரக்கட்டளையில் அமைந்துள்ள அகஸ்தியலிங்கம், சுப்பிரமணியா் சந்நிதிகளில் வழிபட்டாா். நிகழ்ச்சியில், குமரகட்டளை ஸ்ரீமத் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள், ஆதீன தலைமை பொது மேலாளா் ரெங்கராஜ், தருமபுரம் கல்லூரிச் செயலா் இரா.செல்வநாயகம், கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன், திருக்கடையூா் கோயில் கண்காணிப்பாளா் மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா். மேலும், தருமபுரம் சித்தி விநாயகா் கோயில், மயிலாடுதுறை சித்தி விநாயகா் கோயில், சியாமளாதேவி கோயில்களிலும் தருமபுரம் ஆதீனம் தனுா்மாத வழிபாடு நடத்தினாா்.