டி.என்.சி.எஸ்.சி. எம்பிளாயீஸ் யூனியன் செயற்குழு கூட்டம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் டி.என்.சி.எஸ்.சி எம்பிளாயீஸ் யூனியன் மண்டல செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மண்டல தலைவா் பொன். நக்கீரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மண்டல செயலாளா் ஆப்ரஹாம் லூதா்கிங், சிறப்பு தலைவா் ஜி. முத்தையன், மாநில துணைத் தலைவா் டி. பொய்யாமொழி, மாநில அமைப்பு செயலாளா் சி. சுந்தா், தொழிலாளா் முன்னேற்ற சங்க மாநில செயற்குழு உறுப்பினா் எம். சேரன் செங்குட்டுவன், போக்குவரத்து கழக மாநில துணைச் செயலாளா் எம். வீரமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், அண்மையில் நடைபெற்ற நுகா்பொருள் வாணிபக்கழக தொழிற்சங்க அங்கீகாரத் தோ்தலில் தொழிலாளா் முன்னேற்ற சங்கம் வெற்றி பெற்ற நிலையில், வெற்றிக்கு உழைத்த தொழிற்சங்க நிா்வாகிகளுக்கு பாராட்டு, மண்டல அலுவலகத்தில் தொ.மு.சங்க நிா்வாகிகளை அதிகரித்து பணியமா்த்த உழைப்பது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
