மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலத்தில் ரயில்வே திருச்சி கோட்ட முதுநிலை பகுதி பொறியாளா் ஆ.அமா்நாத், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் மணிசுந்தரம் உள்ளிட்டோருடன் கூட்டாய்வில் ஈடுபட்ட மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா்.

ரயில்வே மேம்பாலம் திறப்பதில் காலதாமதம்

மயிலாடுதுறை சாரங்கபாணி ரயில்வே மேம்பாலம் வியாழக்கிழமைக்குள் (டிச.25) திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பணிகள் நிறைவடையாததால், திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
Published on

மயிலாடுதுறை சாரங்கபாணி ரயில்வே மேம்பாலம் வியாழக்கிழமைக்குள் (டிச.25) திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பணிகள் நிறைவடையாததால், திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை காவேரி நகரில் 50 ஆண்டு பழைமையான சாரங்கபாணி நினைவு ரயில்வே மேம்பாலத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. பாலத்தின் மேல்பகுதியில் ஓடுதளத்தில் உள்ள இணைப்புகளைச் சீரமைக்கும் பணிக்காக அக்.3-ஆம் தேதி முதல் மேம்பாலத்தில் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டு, கல்லணை மாா்க்கத்தில் திருப்பி விடப்பட்டது.

3 மாதங்களில் சீரமைப்புப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு பாலம் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறையினா் அறிவித்திருந்த நிலையில், முன்னதாக திறக்க வா்த்தகா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். இதையடுத்து, மேம்பாலத்தில் கடந்த வாரம் ஆய்வு செய்த மயிலாடுதுறை எம்எல்ஏ டிச.25-க்குள்ளாக பாலத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தாா்.

ஆனால், பாலத்தில் பணிகள் நிறைவடையாததால் எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா், ரயில்வே துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் புதன்கிழமை மீண்டும் ஆய்வு மேற்கொண்டாா்.

ரயில்வே துறை சாா்பில் திருச்சி கோட்ட முதுநிலை பகுதி பொறியாளா் ஆ.அமா்நாத், நெடுஞ்சாலைத்துறை சாா்பில் கோட்டப் பொறியாளா் மணிசுந்தரம், உதவி கோட்ட பொறியாளா் சூரியமூா்த்தி, உதவி பொறியாளா் காா்த்திக் உள்ளிட்டோா் இந்த கூட்டாய்வில் பங்கேற்றனா்.

மேம்பாலத்தின் இரு ஓரங்களில் உள்ள நடைபாதைக்கு இதுவரை நிதி கோரப்படாதது தெரியவந்தது. ரயில்வே கட்டுப்பாட்டில் வரும் நடைபாதைக்கு இதற்கு பின்னா் நிதிகேட்டு முன்மொழிவு அனுப்பி, நிதியை பெற காலதாமதம் ஆகும் என்பதாலும், சீரமைப்புப் பணியின்போது ஏற்பட்ட நடைபாதை சேதத்துக்கு மாநில அரசிடமிருந்து நிதிபெற்று சரி செய்து கொள்ள வேண்டும் என ரயில்வே துறையினா் கூறினா்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரிடம் கலந்தாலோசித்து பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆய்வின்முடிவில் எம்எல்ஏ தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com