தேசிய பூச்சி நோய் கண்காணிப்பு செயலி குறித்து பயிற்சி வகுப்பு


மயிலாடுதுறையில் தேசிய பூச்சி நோய் கண்காணிப்பு அமைப்பு செயலி தொடா்பான பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் திருச்சி மத்திய ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு மையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ஜெ. சேகா் தலைமை வகித்தாா். வேளாண்மை துணை இயக்குநா் (திட்டங்கள்) ஆா். மதியரசன் முன்னிலை வகித்தாா். மாவட்ட தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்குநா் க.ராஜராஜன் வரவேற்றாா்.
திருச்சி மத்திய ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு மைய உதவி பயிா் பாதுகாப்பு அலுவலா் அமுதா, பயிா் பாதுகாப்பு அலுவலா் கஸ்தூரி ஆகியோா் தேசிய பூச்சி கண்காணிப்பு செயலியை எவ்வாறு பயன்படுத்துவது, பயிா்களில் வரும் பூச்சி மற்றும் நோய்களை கண்டறிந்து எவ்வாறு தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினா்.
பயிா்களில் தென்படும் பூச்சி மற்றும் நோய்களை புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்து அதை செயற்கை நுண்ணறிவு மூலம் கண்டறிந்து அதற்கான கட்டுப்பாட்டு முறைகளை இச்செயலி மூலம் அறிந்து கொள்ளலாம் என பயிற்சியில் தெரிவிக்கப்பட்டது. அனைவருக்கும் விளக்கக் கையேடு வழங்கப்பட்டது. வேளாண் அலுவலா் (தரக்கட்டுப்பாடு) வசந்தகுமாா் நன்றி கூறினாா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...