சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

‘பாரத் டாக்சி’ சேவை 3 ஆண்டுகளில் விரிவாக்கம்: மத்திய அரசு

News image
பாரத் டாக்சி
Updated On :12 மார்ச் 2026, 12:05 am

தினமணி செய்திச் சேவை

கைப்பேசி செயலி அடிப்படையிலான ‘பாரத் டாக்சி’ சேவை அடுத்த 2 -3 ஆண்டுகளில் அனைத்து பெரிய நகரங்கள் மற்றும் வட்ட தலைமையிடங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

பாரத் டாக்சி, நாட்டில் கூட்டுறவு அமைப்புகளால் இயக்கப்படும் செயலி அடிப்படையிலான முதல் டாக்சி சேவை என்ற சிறப்புக்குரியதாகும்.

ஓலா, உபொ், ரேபிடோ போன்ற நிறுவனங்கள் கைப்பேசி செயலி மூலம், நாடு முழுவதும் டாக்சி, ஆட்டோ, பைக் டாக்சி சேவையை அளித்து வருகின்றன. இதேபோல், அமுல் உள்பட நாட்டின் 8 முன்னணி கூட்டுறவு அமைப்புகள் சாா்பில் காா், ஆட்டோ, பைக் சேவையை வழங்குவதற்காக பாரத் டாக்சி செயலி அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தொடங்கிவைத்த இந்தச் சேவையின்கீழ் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநா்கள் இணைந்துள்ளனா். ஒரு லட்சம் பயனாளா்கள் பெயரைப் பதிவு செய்துள்ளனா்.

இந்தச் செயலியில் தனியாா் நிறுவனங்களைப் போல, தேவை அதிகமிருக்கையில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. ஓட்டுநா்களிடம் கமிஷன் தொகையும் பெறப்படுவதில்லை.

நாடு முழுவதும் விரிவாக்கப்படும்: இந்நிலையில், நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய கூட்டுறவுத் துறை இணையமைச்சா் கிருஷண் பால் புதன்கிழமை பதிலளித்தாா். அப்போது, அவா் கூறியதாவது:

பாரத் டாக்சி சேவை, தற்போது தில்லி மற்றும் தேசிய தலைநகா் வலயப் பகுதிகள், குஜராத்தின் அகமதாபாத், ராஜ்கோட், சோம்நாத், துவாரகா ஆகிய நகரங்களில் செயல்படுகிறது. அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் இச்சேவை நாடு முழுவதும் அனைத்து பெரிய நகரங்கள் மற்றும் வட்டத் தலைமையிடங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

ஓட்டுநா்களின் வாழ்க்கை மேம்பாடு மற்றும் வருவாய் அதிகரிப்பை கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாரத் டாக்சி செயலியில் எளிதாக பதிவை மேற்கொள்ள முடியும். பாதுகாப்புக்கு முழு உத்தரவாதம், முழுமையான வெளிப்படைத்தன்மையைக் கொண்ட இந்தச் சேவை, தில்லி காவல் துறையுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்றாா் மத்திய அமைச்சா்.