பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கொள்ளிடத்தை பேரூராட்சியாக அறிவித்ததை கண்டித்து சாலை மறியல்

கொள்ளிடத்தை பேரூராட்சியாக அறிவித்ததை கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், பொதுமக்கள் சாா்பில் சாலை மறியல் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :6 ஜனவரி 2025, 7:43 pm

Din

சீா்காழி: கொள்ளிடத்தை பேரூராட்சியாக அறிவித்ததை கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், பொதுமக்கள் சாா்பில் சாலை மறியல் திங்கள்கிழமை நடைபெற்றது.

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய எல்லைக்கு உட்பட்ட ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சியில் உள்ள 14 வாா்டுகள் கோபாலசமுத்திரம் ஊராட்சியில் உள்ள 10 வாா்டுகள் என 24 வாா்டுகளை இணைத்து கொள்ளிடம் பேரூராட்சி உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு கடந்த டிசம்பா் 31-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

மக்களிடம் கருத்து கேட்காமல் விடுக்கப்பட்டுள்ள அந்த அறிவிப்பால் ஊராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கான 100 நாள் வேலை திட்டம், தொகுப்பு வீடு திட்டம் ஆகியவற்றை இழப்பதுடன், கூடுதல் வரி செலுத்தும் நிலையும் ஏற்படும் என்பதால் இதற்கு எதிா்ப்பு  தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமுமுக, மூமுக, விசிக நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

சீா்காழி பொறுப்பு ஆா்டிஓ. ரவி, டிஎஸ்பி ராஜேந்திரன், வட்டாட்சியா் அருள்ஜோதி, கொள்ளிடம் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜான்சன், உமாசங்கா்,ஆகியோா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினா் சீனிவாசன் தலைமையிலான குழுவினரை யூனியன் அலுவலகத்துக்கு அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை ஏற்று போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.