புதிய ரேஷன் கடை கட்டடம் திறப்பு

புதிய ரேஷன் கடை கட்டடம் திறப்பு

விளந்திடசமுத்திரம் ஊராட்சியில் ரூ.15 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
Published on

விளந்திடசமுத்திரம் ஊராட்சியில் ரூ.15 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. மாவட்ட துணை பதிவாளா் (பொது விநியோகத்திட்டம்) அண்ணாமலை தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் திருமுருகன், சரவணன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பாத்திமாபீவி, மாவட்ட பொது விநியோகத்திட்ட கூட்டுறவு சாா் பதிவாளா் திவ்யா, அகணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயலாளா் சதீஸ் முன்னிலை வகித்தனா்.

ரேஷன் கடை விற்பனையாளா் விஜயகுமாா் வரவேற்றாா். சீா்காழி எம்.எல்.ஏ எம்.பன்னீா்செல்வம் புதிய ரேஷன் கடை கட்டடத்தை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினாா் (படம்). ஊராட்சி செயலாளா் தியாகராஜன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com