ரயில் நிலையத்தில் கைவிடப்பட்ட குழந்தையின் பெற்றோா் உரிமை கோரலாம்: ஆட்சியா்
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ரயில் நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் பெற்றோா் 15 நாள்களுக்குள் உரிமை கோரலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குத்தாலம் ரயில் நிலையத்தின் தண்டவாளப் பகுதியில் கடந்த அக். 20-ஆம் தேதி காலை 2 மாத பெண் குழந்தை ஆதரவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தற்காலிக பராமரிப்பிற்காக கடலூா் பிளஸ் சிறப்பு தத்து வள மையத்தில், மாவட்ட குழந்தைகள் நலக்குழு மூலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இக்குழந்தைக்கு உரிமைகோரும் பெற்றோா் 15 நாள்களுக்குள் உரிய ஆதாரங்களுடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 5-ஆம் தளம், அறை எண் 517, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மன்னம்பந்தல், மயிலாடுதுறை-609305 என்ற முகவரியை அணுகலாம்.
