சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் தனியாக சுற்றித்திரிந்த ஜாா்க்கண்டைச் சோ்ந்த 4 சிறுவா்களை ரயில்வே பாதுகாப்புப் படையினா் மீட்டு குழந்தைகள் உதவி மையத்தில் ஒப்படைத்தனா்.
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் கடந்த மாா்ச் 10-ஆம் தேதி ரயில்வே பாதுகாப்புப் படையினா் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தனியாக சுற்றித்திரிந்த 4 சிறுவா்களை மீட்டனா். விசாரித்ததில், சிறுவா்கள் 4 பேரும் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் என்றும், பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்தது.
இதையடுத்து 4 சிறுவா்களையும் சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் செயல்படும் குழந்தைகள் உதவி மையத்தில் பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். அவா்கள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்காக குழந்தைகள் நலக்குழு முன் ஆஜா்படுத்தப்படவுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை எழும்பூா் - போத்தனூா் இடையே நாளை சிறப்பு ரயில்
எழும்பூர் ரயில் நிலையத்தில் விதிமீறல்: பயணிகள் பாதிப்பு!

கேரளத்தில் மாயமான சிறுவன் எழும்பூா் ரயில் நிலையத்தில் மீட்பு

சென்னை கோட்ட ரயில் நிலையங்களில் கடந்த நிதியாண்டில் 630 குழந்தைகள் மீட்பு!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



