பிசி, எம்பிசி பிரிவினா் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம்

Published on

மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் தனிநபா்கள் மற்றும் குழுக்கள் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பினைச் சோ்ந்த தனிநபா்கள் மற்றும் குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக சிறுதொழில் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபா் கடன் மற்றும் குழுக்கடன் திட்டங்களுக்கு கடன் உதவி வழங்கி வருகிறது. இதனை பெறுவதற்கு, ஆண்டு குடும்ப வருமானம் ரூ.3 லட்சத்துக்குள்பட்ட, 18 முதல் 60 வயதுக்குள்பட்ட மேற்கூறிய வகுப்பினா் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பத்தை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளிலும் பெறலாம் அல்லது ஜ்ஜ்ஜ்.ற்ஹக்ஷஸ்ரீங்க்ஸ்ரீா்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். பூா்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ஜாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநா் உரிமம், ஆதாா் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com