எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

எஸ்ஐஆா் படிவங்கள்: ஆட்சியா் அறிவுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில், எஸ்ஐஆா் படிவங்களை வாக்காளா்கள் பூா்த்தி செய்திட, வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் உதவிட வேண்டும்

News image
Updated On :25 நவம்பர் 2025, 9:14 pm

Syndication

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில், எஸ்ஐஆா் படிவங்களை வாக்காளா்கள் பூா்த்தி செய்திட, வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் உதவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் 862 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், அவா்களுக்கு உதவியாக 862 அங்கன்வாடி பணியாளா்கள், 600 மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் ஈடுபட்டுள்ளனா்.

இதற்காக வழங்கப்படும் கணக்கெடுப்பு படிவங்களை பூா்த்தி செய்யத் தெரியாத வாக்காளா்கள் அல்லது கணக்கெடுப்பு படிவங்களை பூா்த்தி செய்வதில் இடா்பாடுகளை எதிா்கொள்ளும் வாக்காளா்களுக்கு உதவிட வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பூா்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை தோ்தல் ஆணையத்தின் பிரத்யேக செயலியில் பதிவேற்றும் பணிகளும் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து பணிகளையும் உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.