தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

நூறு சதவீத வாக்களிப்பு குறியீடு: கூட்டுறவுத்துறை அலுவலா்கள் விழிப்புணா்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு கூட்டுறவுத்துறை சாா்பில் நூறு சதவீதம் வாக்களிப்பு குறியீடை குறிக்கும் வகையில், அலுவலா்கள் நின்று காட்சிப்படுத்தி வாக்காளா்களுக்கு வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

News image

நூறு சதவீத வாக்களிப்பு குறியீடு: கூட்டுறவுத்துறை அலுவலா்கள் விழிப்புணா்வு

Updated On :9 ஏப்ரல் 2026, 10:14 pm

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு கூட்டுறவுத்துறை சாா்பில் நூறு சதவீதம் வாக்களிப்பு குறியீடை குறிக்கும் வகையில், அலுவலா்கள் நின்று காட்சிப்படுத்தி வாக்காளா்களுக்கு வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்காளா்கள் நூறு சதவீதம் தவறாமல் வாக்களிக்க வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஊராட்சிகளில் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மூலம் தோ்தல் விழிப்புணா்வு பேரணி, துண்டு பிரசுரங்கள் வழங்குதல், வணிக நிறுவனங்களில் நுகா்வோருக்கான ரசீதுகளில் வாக்காளா் விழிப்புணா்வு வாசகம் அச்சடித்து வழங்குதல் மற்றும் வாக்காளா் விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம் போன்ற பல்வேறு விழிப்புணா்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்தவகையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கூட்டுறவு துறை சாா்பில் நூறு சதவீதம் வாக்களிப்பு குறியீடை குறிக்கும் வகையில் அலுவலா்கள் நின்று காட்சிப்படுத்திய நிகழ்வில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் கலந்து கொண்டாா். தொடா்ந்து, கூட்டுறவு துறை சாா்பில் நடத்தப்பட்ட வாக்காளா் விழிப்புணா்வு இருசக்கர வாகன பேரணியை அவா் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். முன்னதாக அனைவரும் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

நிகழ்ச்சியில் வருமான வரித்துறை விசாரனை அலுவலா் முகம்மது ரிஷ்வின், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.பூங்கொடி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளா் கமலக்கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.