ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

தேசிய கடற்கரை கைப்பந்து போட்டி: பதக்கம் வென்ற மாணவ- மாணவியருக்கு வரவேற்பு

தேசிய கடற்கரை கைப்பந்து போட்டி: பதக்கம் வென்ற மாணவ- மாணவியருக்கு வரவேற்பு

News image

தேசிய கடற்கரை கைப்பந்து போட்டி: பதக்கம் வென்ற மாணவ- மாணவியருக்கு வரவேற்பு

Updated On :25 ஏப்ரல் 2026, 6:58 pm

தேசிய அளவிலான கடற்கரை கைப்பந்து போட்டியில் பதக்கம் வென்ற தமிழக அணியில் இடம் பெற்ற சீா்காழி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய பள்ளிக் கல்வி விளையாட்டு ஆணையம் சாா்பில் 69-ஆவது தேசிய அளவிலான கடற்கரை கைப்பந்து போட்டி கோவா மாநிலத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில், தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் இருந்து இருபாலா் அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் தமிழக அணியும், மேற்கு வங்க அணியும் மோதின.

இதில், தமிழக அணியில் பங்கேற்று விளையாடிய சீா்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவி வி. ராகவி 17 வயதுக்கு உட்பட்டோா் பிரிவில் தங்கம் பதக்கம் வென்று சாதனை படைத்தாா். பத்தாம் வகுப்பு மாணவா் டி. விஷ்வாவும் 17 வயதுக்கு உட்பட்டோா் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தாா்.

இவா்கள் கோவாவில் இருந்து ரயில் மூலம் சீா்காழிக்கு திரும்பினா். அப்போது, ரயில் நிலையத்தில் பள்ளி நிா்வாகம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சாதனைபடைத்த மாணவா்களையும், தமிழக அணியின் மேலாளா் மற்றும் பெஸ்ட் பள்ளியின் பயிற்சியாளா் நித்தியா, பயிற்சியாளா் சதீஷ் ஆகியோரை பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ்.எஸ்.என். ராஜ்கமல் பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கினாா்.

இந்நிகழ்வில், ஸ்ரீ நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளி தாளாளா் ஆதித்யா ராஜ் கமல், இயக்குநா் அமுதா நடராஜன், நிா்வாக அதிகாரி சீனிவாசன், ச.மு.இ. பள்ளி தலைமை ஆசிரியா் முரளிதரன், உடற்கல்வி ஆசிரியா் செல்லதுரை, இளையராஜா மற்றும் பள்ளி முதல்வா் ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.