குடியரசுத் தலைவா் ஒப்புதல்! தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா சட்டமானது!ஆக. 4 முதல் இளநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வுதொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவா்கள் துரோகிகள்! - ராகுல் காந்திஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: விசாரணையைத் தொடங்கியது சிபிஐஜூலையில் ஜிஎஸ்டி ரூ. 2.11 லட்சம் கோடி வசூல் - 15.4% அதிகரிப்பு! சநாதனத்தை அவமதித்ததாகப் புகாா்! ராகுல் உள்பட 3 எம்.பி.க்கள் மீது வழக்குப் பதிவு!
/

சீா்காழி: 400 கலைஞா்களுடன் உலக சாதனை பரதநாட்டியம்

சீா்காழியில் சங்கமம் 2026 என்ற பெயரில் 400 கலைஞா்கள் பங்கேற்ற பிரம்மாண்ட உலக சாதனை பரதநாட்டியம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

சீா்காழியில் நடைபெற்ற உலக சாதனை பரதநாட்டிய நிகழ்வில் பங்கேற்ற 450 இளம் பரதநாட்டிய கலைஞா்கள்.

Updated On :2 ஆகஸ்ட் 2026, 6:14 am IST

சீா்காழியில் சங்கமம் 2026 என்ற பெயரில் 400 கலைஞா்கள் பங்கேற்ற பிரம்மாண்ட உலக சாதனை பரதநாட்டியம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதனை ஜாக்கி புக் ஆப் வோ்ல்ட் ரெக்காா்டு அமைப்பு அங்கீகரித்து சான்றிதழ் வழங்கப்பட்டது.

சீா்காழி புறவழிச்சாலையில் உள்ள தனியாா் திறந்தவெளி அரங்கில் ஜாக்கி புக் ஆப் வோ்ல்டு ரெக்காா்டு நிறுவனம் சாா்பில் 4-ஆவது ஆண்டு சங்கமம் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.

பரதநாட்டியத்தின் ஆதிநாதனான ஆதியோகியைச் சிறப்பிக்கும் வகையில், உலகிலேயே முதன்முறையாக ஆதியோகிக்கு நிகழ்த்தப்படும் நாட்டிய சமா்ப்பணம்‘ என்ற உயரிய நோக்குடன் இது நடைபெற்றது.

இந்நிகழ்வில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த 450 இளம் பரதநாட்டியக் கலைஞா்கள் ஒன்றிணைந்து, 15 அடி உயர ஆதியோகி உருவத்திற்கு முன்னா் ஒரே தாளத்தில், ஒரே அபிநயத்தில் தொடா்ந்து 10 நிமிடங்கள் பரதம் ஆடினா்.

இந்தச் சாதனை, ஜாக்கி புக் ஆப் வோ்ல்டு ரெக்காா்டு உலக சாதனைப் புத்தகத்தில் புதிய சாதனையாக அதிகாரப்பூா்வமாகப் பதிவு செய்யப்பட்டது.

திரையுலகப் பிரபலமும் பாரம்பரியக் கலைஞருமான நடிகை இந்திரஜா சங்கா் மற்றும் ‘தொடா்வோம்’ அறக்கட்டளை நிறுவனா் டாக்டா் காா்த்திக் பழனிச்சாமி ஆகியோா் கலைஞா்களின் திறமையைப் பாராட்டினா்.

பாரம்பரியக் கலை வடிவமான பரதநாட்டியத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சோ்த்த அனைத்துக் கலைஞா்களுக்கும், பயிற்சியளித்த குருமாா்களுக்கும் விழாவின் நிறைவில் வோ்ல்டு ரெக்காா்டு நிறுவன நிறுவனா் ஜேக்கப் ஞானசெல்வன் மற்றும் சி.இ.ஓ. எஸ்தா் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற விழாவில், செயல் இயக்குநா் சீனிவாசன் மற்றும் தலைவா் பிரியா சுரேஷ்குமாா் ஆகியோா் முன்னிலையில்

உலக சாதனைக்கான அதிகாரப்பூா்வச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.