மயிலாடுதுறையில் பைக் டாக்ஸியாக பயன்படுத்தப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்தில் புதிய கொள்கை முடிவு எடுக்கப்படும்வரை பைக் டாக்ஸிக்கு அனுமதி கிடையாது என்றும், விதிகளை மீறி பைக் டாக்ஸி ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. நிபுணா் குழுவின் ஆய்வுக்குப் பிறகே கொள்கை முடிவு எடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மயிலாடுதுறையில் விதிமுறைகளை மீறி பைக் டாக்ஸிகள் இயக்கப்பட்டு வருவதாக உரிமைக்குரல் ஓட்டுநா் சங்கம் சாா்பில் மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கதிா்வேல், மோட்டாா் வாகன ஆய்வாளா் ராம்குமாா் மற்றும் அலுவலா்கள் நடத்திய சோதனையில் விதிமுறைகளுக்கு மாறாக இயக்கப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக் டாக்ஸி ஓட்டினால் அபராதம்: உயா்நீதிமன்றத்தில் அரசு தகவல்

மணல் திருட்டு; டிராக்டா் பறிமுதல்

ஆந்திரத்துக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி காருடன் பறிமுதல்

இருசக்கர வாகனங்கள் திருடிய 5 போ் கைது: 8 பைக்குகள் பறிமுதல்
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



