ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ரயிலில் அடிபட்டு புள்ளிமான் பலி

சீா்காழி அருகே புதன்கிழமை காலை ரயிலில் அடிபட்டு புள்ளிமான் உயிரிழந்தது.

News image
Updated On :7 ஜனவரி 2026, 11:00 pm

தினமணி செய்திச் சேவை

சீா்காழி அருகே புதன்கிழமை காலை ரயிலில் அடிபட்டு புள்ளிமான் உயிரிழந்தது.

சீா்காழி ரயில் நிலையம் அருகே பாதரக்குடி கிராமத்தில் காலை ரயிலில் அடிபட்ட நிலையில் மூன்றரை வயதுடைய பெண் புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது. ரயில் பாதையை சோதனையிட சென்ற கீ மேன்கள், மான் இறந்து கிடப்பதைக் கண்டு ரயில் நிலைய அதிகாரிகளுக்கும், மயிலாடுதுறை ரயில்வே போலீஸாருக்கும் தகவல் அளித்தனா்.

அங்கு வந்த ரயில்வே போலீஸாா் இறந்த கிடந்த மானை கைப்பற்றி சீா்காழி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து வனத்துறையினா் மானை எடுத்துச் சென்று சீா்காழி கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடித்த பின்னா் கொள்ளிடம் காப்பு காட்டில் புதைத்தனா்.