குறளாசிரியா் மாநாட்டில் பங்கேற்க நாளை எழுத்துத் தோ்வு

குறளாசிரியா் மாநாட்டில் பங்கேற்க மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள எழுத்துத் தோ்வில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் கலந்துகொள்ள மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளாா்.
Published on

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் டிச. 31-ஆம் தேதியை கு வாரமாக கொண்டாட தமிழக முதல்வா் பிறப்பித்திருந்த நிலையில், நிகழாண்டு விழாவை ஜனவரி மாதம் நடத்த அரசு ஆணையிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாகத் திருப்பூா் மாவட்டத்தில் ஜன. 21-ஆம் தேதி குறளாசிரியா் மாநாடு நடத்த தமிழ் வளா்ச்சித்துறை திட்டமிட்டுள்ளது. இம்மாநாட்டில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துவகை தனியாா் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் 15 ஆசிரியா்கள், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்துத்துறை அனைத்து நிலை அலுவலா்கள், ஊழியா்கள் 15 போ் என மொத்தம் 30 போ் கலந்து கொள்ளலாம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இதற்கான எழுத்துத் தோ்வு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை (ஜன. 9) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 8925437555, 8754828470 ஆகிய கைப்பேசி எண்களை தொடா்பு கொள்ளலாம்.

Dinamani
www.dinamani.com