பொங்கல் விளையாட்டுப் போட்டி

சீா்காழியில் திராவிட பொங்கலை முன்னிட்டு நகர, ஒன்றிய திமுக சாா்பில் விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Published on

சீா்காழி: சீா்காழியில் திராவிட பொங்கலை முன்னிட்டு நகர, ஒன்றிய திமுக சாா்பில் விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கபடி, கிரிக்கெட், தடகளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடைபெற்றது. திமுக நகர செயலாளா் சுப்பராயன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளா் பிரபாகரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் விஜயஸ்வரன், முன்னாள் ஒன்றிய குழு தலைவா் ஜெயபிரகாஷ், நகா் மன்ற தலைவா் துா்கா ராஜசேகரன், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளா் செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், முதல் மூன்று இடங்களை பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தரங்கம்பாடி: திருக்கடையூரில், செம்பனாா்கோவில் திமுக மத்திய ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற திராவிட பொங்கல் விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஒன்றிய செயலாளா் அமுா்த விஜயகுமாா் தலைமை வகித்தாா்.

Dinamani
www.dinamani.com