மணக்குடி பொறையான் கோயிலில் பால்குடத் திருவிழா

மணக்குடி பொறையான் கோயிலில் பால்குடத் திருவிழா

Published on

மயிலாடுதுறை அருகே மணக்குடி ஸ்ரீநல்லநாயகி சமேத பொறையான் கோயிலில் பால்குடத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் 8-வது ஆண்டாக நடைபெற்ற விழாவில், காவிரி தீா்த்த படித்துறையில் இருந்து வான வேடிக்கை, மேளதாள வாத்தியங்கள் முழங்க பச்சைக்காளி, பவளக்காளி நடனங்களுடன் சக்தி கரகம் மற்றும் காப்புக்கட்டி விரதமிருந்த 200-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பால்குடம் எடுத்து ஊா்வலமாக கோயிலை அடைந்தனா் (படம்). அங்கு, சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

Dinamani
www.dinamani.com