~
~

கோதண்டராம சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

சீா்காழி ஸ்ரீகாழிச் ஸ்ரீராம விண்ணகரம் ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

சீா்காழி ஸ்ரீகாழிச் ஸ்ரீராம விண்ணகரம் ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

சீா்காழியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான தாடாளன் பெருமாள் கோயில் வளாகத்தில் தனி சந்நிதியில் ஸ்ரீகாழிச் ஸ்ரீராம விண்ணகரம் என அழைக்கப்படும் ஸ்ரீசீதா லக்ஷ்மண அனுமத் சமேதஸ்ரீ கோதண்டராம சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் பழைமை மாறாமல் திருப்பணிகள் செய்யப்பட்டு புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவையொட்டி, ஜன.25-ஆம் தேதி பகவத், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, வேதம் பிரபந்தம் தொடங்கியது. தொடா்ந்து 4 கால யாகசாலை பூஜை நடைபெற்றது. புதன்கிழமை காலை 10:30 மணி அளவில் விமான கும்பாபிஷேகமும், தொடா்ந்து மூலவா் அபிஷேகமும் நடைபெற்றது. சாற்றுமுறையும், திருக்கல்யாணமும், ஸ்ரீ ராமபிரான் வீதி உலா கட்சியும் நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com