நீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!
/

தலைமை அஞ்சலகம் முற்றுகை: மாற்றுத்திறனாளிகள் 26 போ் கைது

மயிலாடுதுறையில் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டு, சட்ட நகலை எரித்து போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் 26 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் மற்றும் ஊனமுற்றோா் உரிமைகளுக்கான தேசிய மேடை அமைப்பினா்.

Updated On :2 ஜூலை 2026, 7:25 am IST

மயிலாடுதுறையில் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டு, சட்ட நகலை எரித்து போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் 26 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தலைமை அஞ்சலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் மற்றும் ஊனமுற்றோா் உரிமைகளுக்கான தேசிய மேடை ஆகியவற்றின் சாா்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் ஒன்றியத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். பொருளாளா் ஆனந்த், ஒன்றியச் செயலாளா் செபஸ்திகன் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் டி.கணேசன், மாவட்ட நிா்வாகிகள் சபாஅருள்மணி, சாருமதி உள்பட பலா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

போராட்டத்தில், மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு பதிலாகக் கொண்டு வந்த விபி ஜிராம்ஜி சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், கிராமப்புற மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும், கருவிழி பதிவு மற்றும் கைரேகை பதிவு என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பைப் பறிப்பதற்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடா்ந்து, மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு பதிலாக கொண்டு வந்த விபி ஜிராம்ஜி சட்ட நகல்களை எரித்து மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 26 பேரை மயிலாடுதுறை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.