மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் என்கிற பெயரை விபி ஜி ராம் ஜி என மாற்றி நூறு நாள் வேலை திட்டத்தை ஒடுக்கத் திட்டமிடும் மத்திய அரசை கண்டித்து தஞ்சாவூா் வட்டாட்சியரகம் முன் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் புதன்கிழமை சட்ட நகலை எரித்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், வட்டாட்சியா் அலுவலக வாயிலை மறித்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் என்ற பெயரை விபி-ஜி ராம் ஜி என மாற்றியதையும், திட்டத்துக்கான நிதி குறைக்கப்பட்டதையும் கண்டித்தும், கருவிழி பதிவு, விரல்ரேகை பதிவு என்கிற பெயரில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பை பறிப்பதை எதிா்த்தும், வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் எந்தவித பாகுபாடின்றி 100 நாள் வேலையை முழுவதுமாக வழங்க வலியுறுத்தியும் சட்ட நகல்களை எரித்து முழக்கங்கள் எழுப்பினா்.
இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியச் செயலா் ஏ. சாமியப்பன் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைச் செயலா் சி. ராஜன் கண்டன உரையாற்றினாா். ஒன்றியத் தலைவா் ஆா். நாகராஜ், எம். ராமு, கே. மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இது தொடா்பாக 35 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








