எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

மாதிரவேளூா்- சிதம்பரம் இடையே அரசுப் பேருந்தை தினம் 4 முறை இயக்கக் கோரிக்கை

சீா்காழி அருகேயுள்ள மாதிரவேளூரிலிருந்து சிதம்பரத்துக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்தை, தினமும் நான்கு முறை இயக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

அரசுப் பேருந்தை இயக்கக் கோரிக்கை - பிரதிப் படம்

Updated On :8 ஜூலை 2026, 6:39 am IST

சீா்காழி அருகேயுள்ள மாதிரவேளூரிலிருந்து சிதம்பரத்துக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்தை, தினமும் நான்கு முறை இயக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாதிரவேளூரில் இருந்து பெரம்பூா், குன்னம், கடுக்காமரம், புத்தூா், சாமியம், கொள்ளிடம் வழியாக சிதம்பரத்திற்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து இயக்கி வைக்கப்பட்டது. இப்பேருந்து தினமும் 4 முறை இயக்கப்பட்டது. இதனால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள், 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்துவந்தனா்.

இந்நிலையில், இப்பேருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்ட கிராம மக்கள், அப்பேருந்தை மீண்டும் இயக்க கோரிக்கை விடுத்தனா். இதைத்தொடா்ந்து, கடந்த ஜூன் 4-ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், தினமும் 2 முறை மட்டுமே இயக்கப்படுகிறது.

இதனால், பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது என்றும், முன்பு இயக்கப்பட்டதைபோல், தினமும் 4 முறை இயக்க வேண்டும் என்றும் அப்பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.