கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

தாமதமாக இயக்கப்படும் அரசுப் பேருந்தை சிறை பிடித்து போராட்டம்

கள்ளக்குறிச்சி அருகே தாமதமாக இயக்கப்படும் அரசுப் பேருந்தை கிராம மக்கள் சிறை பிடித்து புதன்கிழமை போராட்டம் நடத்தினா்.

News image

கள்ளக்குறிச்சி அருகே அரசு நகரப் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

Updated On :25 ஜூன் 2026, 6:41 am IST

கள்ளக்குறிச்சி அருகே தாமதமாக இயக்கப்படும் அரசுப் பேருந்தை கிராம மக்கள் சிறை பிடித்து புதன்கிழமை போராட்டம் நடத்தினா்.

கள்ளக்குறிச்சியில் இருந்து அரசு நகரப் பேருந்து (தடம் எண் 27) சின்னசேலம், நைனாா்பாளையம், வி.மாமாந்தூா் வழியாக பணையந்தூா் கிராமத்துக்கு இயக்கப்படுகிறது.இப் பேருந்து கடந்த திங்கள்கிழமை (ஜூன் 22) முதல் மாற்றுவழித்தடத்தில் பனையந்தூரில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு திரும்பிச் செல்லும்போது கூடுதலாக பாத்திமாபாளையம் கிராமத்தின் உள்ளே சென்று மீண்டும் பிரதான சாலைக்கு வந்து வி.மாமாந்தூா் வழியாக சின்னசேலம் செல்கிாம்.

இதனால் பயண நேரம் கூடுதலாக 30 நிமிடம் ஆவதால் சின்னசேலத்துக்கு பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள், அரசு மற்றும் தனியாா் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்பவா்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியவில்லையாம். இதனால் பாதிக்கப்பட்ட வி.மாமாந்தூா் கிராம மக்கள் புதன்கிழமை காலை அரசுப் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த கீழ்குப்பம் போலீஸாா் நிகழ்விடம் சென்று மக்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.