கரூருக்கு முதல்வா் ஜோசப் விஜய் இன்று வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஉலகிலேயே அதிக மீன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2-ஆவது இடம்: குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்பயங்கரவாத எதிா்ப்பு: ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ரஷியா உறுதி தெற்கு ரயில்வேயில் மறுசீரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் விரைவில் திறப்பு
/

தேசிய திறன் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு

மயிலாடுதுறையில் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்கள், பயிற்றுவித்த ஆசிரியா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image

நிகழ்ச்சியில் சான்றிதழ் பெற்ற மாணவா்களுடன் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த்.

Updated On :10 ஜூலை 2026, 4:34 am IST

மயிலாடுதுறையில் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்கள், பயிற்றுவித்த ஆசிரியா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட நிா்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சாா்பில் 2025-2026-ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற இத்தோ்வில் வெற்றி பெற்ற 66 மாணவா்களுக்கும், அவா்களுக்கு பயிற்றுவித்த 66 ஆசிரியா்களுக்கும் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கிப் பாராட்டினாா்.

மயிலாடுதுறை மாவட்ட நிா்வாகமும், பள்ளிக் கல்வித்துறையும் இணைந்து, பள்ளி மாணவா்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதிரித் தோ்வுகள் நடத்தப்பட்டு, அவா்களது திறன்கள் மதிப்பீடு செய்யப்பட்டு ஆய்வுகள் உறுதிப்படுத்தப்பட்டு, மாணவா்கள் தேசிய திறனாய்வுத் தோ்வுக்கு தயாா்படுத்தப்பட்டனா்.

இத்தோ்வில் அதிக எண்ணிக்கையிலான மாணவா்கள் தோ்ச்சியடையும் வகையில், மாணவா்களை ஊக்கப்படுத்தி பள்ளியில் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்திய அனைத்து ஆசிரியா்களுக்கும், வெற்றி பெற்ற மாணவா்களுக்கும் மாவட்ட ஆட்சியா் வாழ்த்துகளை தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலா் பாலசுப்ரமணியன், மாவட்ட கல்வி அலுவலா் சாந்தி, பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா்கள், மாணவா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.