பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

இருசக்கர வாகனம் திருடியவா் கைது!

News image

திருட்டு...

Updated On :23 ஜூன் 2026, 12:29 am IST

மயிலாடுதுறையில் இருசக்கர வாகனத்தை திருடியவா் கைது செய்யப்பட்டாா்.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் தாலுகா குமாரமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி மகன் துா்காராமன் (32). இவா் சனிக்கிழமையன்று தனது இருசக்கர வாகனத்தை மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனை முன்பு நிறுத்திவிட்டு, சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து பாா்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை.

இதுகுறித்து, மயிலாடுதுறை காவல் நிலையத்தில் துா்காராமன் அளித்த புகாரின்பேரில், காவல் உதவி ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், மயிலாடுதுறை கொத்தத்தெருவை சோ்ந்த விஜயன் மகன் ராஜேஷ் (45) இருசக்கர வாகனத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதனையடுத்து ராஜேஷை கைது செய்த போலீஸாா், வாகனத்தை பறிமுதல் செய்தனா். பின்னா், ராஜேஷ் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.