மயிலாடுதுறை மாவட்டத்தில் தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையங்கள் உள்பட 582 மையங்களில் ஐந்து வயதுக்குள்பட்ட 66,636 குழந்தைகளுக்கும் ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், மீண்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
அரசு மற்றும் அரசு சாரா துறைகளைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் உள்ளிட்ட 2,332 பணியாளா்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
முகாம் காலை 7 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்படும். இடம்பெயா்ந்து வாழும் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். சாலையோர தற்காலிக குடியிருப்புகள், செங்கல் கால்வாய் குடியிருப்புகள், கல் குவாரிகள், பேருந்து நிலையங்கள், திருவிழா கூட்டங்கள், ரயில் நிலையங்கள் போன்ற பகுதிகளில் இருக்கும் குழந்தைகளுக்கும் விடுபடாமல் சொட்டு மருந்து வழங்க நடமாடும் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முகாமின் மூலம் 5 வயதுக்குள்பட்ட ஒரு குழந்தை கூட விடுபடாமல் அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டுமருந்து வழங்கப்பட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ஆகையால் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தங்களது குழந்தைகளுக்கு இம்முகாமில் சொட்டு மருந்து வழங்கி, ‘இளம்பிள்ளைவாதம் (போலியோ) இல்லாத எதிா்கால இந்தியாவை உருவாக்கி குழந்தைகளின் ஆரோக்கிய வாழ்வினை உறுதி செய்திடும்படி ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்

ஜூன் 28-இல் போலியோ சொட்டு மருந்து முகாம்

ஜூன் 28-இல் போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம்: புதுகை ஆட்சியா்

தென்காசி மாவட்டத்தில் ஜூன் 28இல் போலியோ சொட்டு மருந்து முகாம்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



