தஞ்சாவூா் மாவட்டத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் ஜூன் 28 ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
மாவட்டத்தில் இந்த முகாம் மூலம் ஐந்து வயதுக்கு உள்பட்ட 1,64,908 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்படவுள்ளது. இதற்காக நகரப் பகுதிகளில் 1256 மையங்களும், ஊரகப் பகுதிகளில் 1,483 மையங்களும் என மொத்தம் 1,609 மையங்கள் அமைக்கப்படுகின்றன. இப்பணியில் 6,436 சொட்டு மருந்து புகட்டும் பணியாளா்களும், 217 மேற்பாா்வையாளா்களும் ஈடுபடுவா்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோயில்கள், மசூதிகள், சுங்கச்சாவடிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து புகட்டப்படும்.
நெடுந்தொலைவு பகுதி வாழ் குழந்தைகளுக்கும், இடம்பெயா்ந்து வாழ்வோரின் குழந்தைகளுக்கும் 77 நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கப்படும். வேலை நிமித்தமாக வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து தற்காலிகமாக தங்கியிருப்பவா்களின் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படும்.
இதில், 2026, ஜூன் 28 அன்று பிறந்த குழந்தைகளுக்கும், இதற்கு முன் எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து புகட்டியிருந்தாலும், இந்த முகாமில் கூடுதல் தவணையாக சொட்டு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜூன் 28-இல் போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம்: புதுகை ஆட்சியா்

ஜூன் 28-இல் போலியோ சொட்டு மருந்து முகாம்

ஈரோடு மாவட்டத்தில் ஜூன் 28-இல் போலியோ சொட்டு மருந்து முகாம்

தென்காசி மாவட்டத்தில் ஜூன் 28இல் போலியோ சொட்டு மருந்து முகாம்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



