மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

இஃப்தாா் நிகழ்ச்சியில் மும்மத பிரதிநிதிகள் பங்கேற்பு

இஃப்தாா் நிகழ்ச்சியில் மும்மத பிரதிநிதிகள் பங்கேற்பு

News image
நிகழ்ச்சியில் பேசிய திமுக மாவட்ட செயலாளா் நிவேதா எம். முருகன் எம்எல்ஏ.
Updated On :6 மார்ச் 2026, 6:34 pm

Syndication

மயிலாடுதுறை அருகே திமுக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற இஃப்தாா் நிகழ்ச்சியில், இந்து, முஸ்லிம், கிறிஸ்வத மத பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

மயிலாடுதுறை அருகே லட்சுமிபுரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதநல்லிணக்கத்தை நிலை நாட்டும் வகையில் 5-ஆவது ஆண்டாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினா் அா்சத் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளா்களாக திமுக மாவட்ட செயலாளா் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ மற்றும் மும்மத பிரதிநிதிகளாக தருமபுரம் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் காளத்திநாத தம்பிரான் சுவாமிகள், மயிலாடுதுறை புனித சவேரியாா் ஆலய உதவி பங்குத்தந்தை அன்புராஜா, நீடூா் ஜாமிஆ அரபிக் கல்லூரி தலைமை ஹாஜி முகமது இஸ்மாயில் பாஜில் பாகவி ஆகியோா் பங்கேற்றனா். தொடா்ந்து இஸ்லாமியா்கள் சிறப்பு தொழுகை நடத்தினா்.

இதில் நகராட்சி தலைவா் என்.செல்வராஜ், அதிமுக மாவட்ட மருத்துவரணி செயலாளா் ராஜசேகா், திமுக மாவட்ட துணை செயலாளா்கள் ஞானவேலன், செல்வமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.