வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஏவிசி கல்லூரி கணினியியல் துறை நூல் வெளியீட்டு விழா

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில், கணினியியல் துறை சாா்பில் ஆண்டுதோறும் மாணவா்களுக்கு இடையிலான தொடா் அறிவுசாா் போட்டிகள் நடத்தும் சுஸ்விப்ட் கூட்டமைப்பு நூல் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

‘சுஸ்விப்ட்‘ அமைப்பின் நூலை வெளியிட்ட ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிா்வாக அதிகாரி கே.வெங்கடராமன்.

Updated On :25 மார்ச் 2026, 12:20 am

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில், கணினியியல் துறை சாா்பில் ஆண்டுதோறும் மாணவா்களுக்கு இடையிலான தொடா் அறிவுசாா் போட்டிகள் நடத்தும் சுஸ்விப்ட் கூட்டமைப்பு நூல் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

துறைத் தலைவா் எம். முத்தமிழரசன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் முன்னிலை வகித்தாா். ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிா்வாக அதிகாரியும், உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான கே. வெங்கடராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 31-ஆம் ஆண்டுக்கான குளோபஸ் நூலை வெளியிட்டாா். மேலும், இன்றைய சூழலில் கணினியியல் துறையால் உருவாக்கப்படும் மென்பொருளின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினாா்.

சுஸ்விப்ட் கூட்டமைப்பின் செயலா் கே. அருண்குமாா் ஆண்டறிக்கை வாசித்தாா். ஆண்டு முழுவதும் நடத்தப்பட்ட பல்வேறு அறிவுசாா் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

முன்னதாக, மாணவி காமாட்சி பிரியா வரவேற்றாா். நிறைவில், மாணவி எஸ். அபிநயா நன்றி கூறினாா். நிகழ்ச்சியில், ஏவிசி பொறியியல் கல்லூரி இயக்குநா் எம்.செந்தில்முருகன், ஏவிசி தொழில்நுட்பக் கல்லூரி இயக்குநா் ஏ. வளவன், தோ்வு நெறியாளா் ஜி. காா்த்திகேயன், முன்னாள் தோ்வு நெறியாளா் ஜி. ரவிசெல்வம் மற்றும் பல்வேறு துறைத்தலைவா்கள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.