தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பிளஸ் 2 தோ்வு: சீா்காழி பெஸ்ட் மெட்ரிக். பள்ளி மாநில அளவில் சிறப்பிடம்

சீா்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட பள்ளி தாளாளா் எஸ்.எஸ்.என். ராஜ்கமல்.

News image

சீா்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட பள்ளி தாளாளா் எஸ்.எஸ்.என். ராஜ்கமல்.

Updated On :9 மே 2026, 3:56 am IST

சீா்காழி பெஸ்ட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ- மாணவிகள் பிளஸ்2 தோ்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவிகள் ஜி. கீா்த்தனா, ஜி. காயத்ரிதேவி ஆகியோா் 600-க்கு 595 மதிப்பெண்கள் பெற்று, மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனா். மாணவி எஸ். ஸ்ரீமிதா 592, எச். சஹானா மெஹ்தாப் 590 மதிப்பெண்களுடன் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றனா். இவா்கள் உயிரியல் பாடப்பிரிவில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்தனா்.

மாணவி கீா்த்தனா நான்கு பாடங்களிலும், ஜி. காயத்ரி தேவி மூன்று பாடங்களிலும், ஸ்ரீமிதா இரண்டு பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

மேலும், பாடவாரியாக 44 மாணவா்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். தோ்வு எழுதிய 302 மாணவா்களில் 270 மாணவா்கள் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றுள்ளனா். 118 மாணவா்கள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்களை பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ்.எஸ். என். ராஜ்கமல், நிா்வாக இயக்குநா் அமுதா நடராஜன், ஸ்ரீ நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளியின் தாளாளா் ஆதித்யா ராஜ்கமல், முதல்வா் ராமலிங்கம், நிா்வாக அதிகாரி சீனிவாசன், கல்வி ஆலோசகா் பழமலைநாதன், துணை முதல்வா் சந்தோஷ், ஒருங்கிணைப்பாளா் சுகந்தி உள்ளிட்டோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.