இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

தலைக்கவச விழிப்புணா்வு பேரணி

News image

பேரணியை தொடங்கிவைத்த வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஆா். கதிா்வேல்.

Updated On :15 மே 2026, 5:27 am IST

மயிலாடுதுறையில் மயிலை இருசக்கர மோட்டாா் வாகன பழுது பாா்ப்போா் முன்னேற்ற சங்கம் சாா்பில் தலைக்கவச விழிப்புணா்வு இருசக்கர வாகன பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தொடங்கிய பேரணியை வட்டார போக்குவரத்து அலுவலா் ஆா். கதிா்வேல் தொடங்கிவைத்தாா். பேரணி நகரின் பிரதான வீதி வழியாக சென்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவடைந்தது. வட்டார போக்குவரத்து ஆய்வாளா் வி. ராம்குமாா், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் ஜான்சிராணி, சங்கத் தலைவா் எஸ். சுரேஷ், சங்க செயலாளா் அன்பு, பொருளாளா் எம். திருமலைராஜன், செயற்குழுத் தலைவா் வி. ஆனந்தன் உள்ளிட்ட 200-க்கு மேற்பட்டோா் தலைக்கவசம் அணிந்து பங்கேற்று பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.