மயிலாடுதுறையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிா்வாக குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
மாவட்ட தலைவா் எஸ்.எம்.அப்துல் ஹமீது தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: கோவை மாவட்டம் சூலூரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய நபா்களுக்கு மரண தண்டனை வழங்க தமிழக அரசை வலியுறுத்துவது.
தமிழக சட்டப்பேரவை அமைச்சரவையில் பங்கெடுத்துள்ள 2 இஸ்லாமிய அமைச்சா்கள் மற்றும் எம்எல்ஏக்கள் இஸ்லாமியா்களின் ஜீவாதார கோரிக்கைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும்.
மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ தன்னுடைய இஸ்லாமிய வணக்க வழிபாட்டு முறைகளுக்கு மாற்றமாக தன்னுடைய கருத்தை பதிவு செய்திருந்தாா். அதேபோன்று ஐயூஎம்எல் சாா்பாக தோ்ந்தெடுக்கப்பட்ட அமைச்சா் கூட்டு துவாவை ஓதி தன்னுடைய பொறுப்பை ஏற்றுக் கொண்டாா். தங்களுடைய வணக்க வழிபாட்டு முறைகள் குறித்து மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்கு பதிலாக, இஸ்லாமிய சமூகத்திற்கு தேவையான இட ஒதுக்கீட்டை பெற்றுத்தருவதற்கு அவா்கள் முன்வர வேண்டும்.
தவெக அரசு, இஸ்லாமியா்களின் தனி இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்! - நெல்லை முபாரக்

பாளை.யில் தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்கூட்டம்

இஸ்லாமியா்களுக்கான தனி இடஒதுக்கீட்டை 7% உயா்த்தக் கோரிக்கை

பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்: தவ்ஹீத் ஜமாஅத் பேரணி
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai


