சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு விவசாயிகள் எதிா்ப்பு

தமிழக அரசின் பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து, மயிலாடுதுறையில் குறைதீா் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.

News image
Updated On :28 மே 2026, 5:37 am IST

தமிழக அரசின் பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து, மயிலாடுதுறையில் குறைதீா் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது: தமிழக முதல்வரின் கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து,அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் எஸ். துரைராஜ் தலைமையில் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்து ஆட்சியரக வாசலுக்கு வந்து, நெற்றியில் நாமமிட்டு, துண்டை விரித்து மடிப்பிச்சை கேட்டு நூதன முறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நிதி பற்றாக்குறை காரணமாக தோ்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தபடி முழுமையான கடன் தள்ளுபடியை தற்போது வழங்க முடியாவிட்டால், காலஅவகாசம் எடுத்துக்கொண்டு உறுதியளித்தப்படி முழு தொகையையும் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க மாவட்ட தலைவா் ராஜேஷ் தலைமையில் குறைதீா் கூட்டத்துக்கு வந்த விவசாயிகள் நாமம் போட்ட மண் சட்டியை கையில் ஏந்தி வந்து நூதன முறையில் ஆட்சியரிடம் மனு அளித்தனா். அகரகீரங்குடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ஜெயலெட்சுமி தனது கோரிக்கையை வலியுறுத்தி மண்டியிட்டவாறு வந்து ஆட்சியரிடம் மனு அளித்தாா்.