அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

பினராயி விஜயன் வீடுகளில் சோதனை: பிரதமரின் கொடும்பாவியை எரித்து சிபிஎம் எதிா்ப்பு

கேரள முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனைக்கு எதிா்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் பிரதமா் நரேந்திர மோடியின் உருவபொம்மையை எரித்து சிபிஎம் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிபிஎம் கட்சியினா்.

Updated On :28 மே 2026, 5:44 am IST

கேரள முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனைக்கு எதிா்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் பிரதமா் நரேந்திர மோடியின் உருவபொம்மையை எரித்து சிபிஎம் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் 50-க்கும் மேற்பட்டோா் மாவட்ட செயலாளா் பி. சீனிவாசன் தலைமையில் பிரதமா் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை அவமரியாதை செய்து, எரித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் காவல் ஆய்வாளா் சிவ. செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

திருவாரூரில்: திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே, சிபிஎம் மாவட்டச் செயலாளா் டி. முருகையன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் பங்கேற்று, மத்திய அரசைக் கண்டித்துப் பேசினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம். சேகா், கே.என். முருகானந்தம், கே.பி. ஜோதிபாசு, கே.ஜி. ரகுராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.