தில்லியில் முதல்வர் ஜோசப் விஜய்க்கு வரவேற்பு!கர்நாடக முதல்வர் சித்தராமையா நாளை ராஜிநாமா? குண்டர் தடுப்புச் சட்ட ரத்து வழக்கு! உயர் நீதிமன்றத்தில் காத்திருக்கும் முன்னாள் காவல் ஆணையர் அருண்!இணையும் அதிமுக: இபிஎஸ்ஸுடன் எஸ்.பி. வேலுமணி சந்திப்பு!பைஜுஸ் நிறுவனர் ரவீந்திரனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை!பினராயி விஜயன் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
/

பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: மு.க. ஸ்டாலின் கண்டனம்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தது பற்றி...

News image

பினராயி விஜயன் / மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :27 மே 2026, 1:18 pm IST

பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீடு உள்பட10 இடங்களில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தி வருகின்றது.

சிஎம்ஆர்எல் கனிமவள நிறுவனத்துடன் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் பினராயி விஜயனுக்குச் சொந்தமான கண்ணூர், திருவனந்தபுரம் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் திடீரென இந்தச் சோதனை நடைபெற்று வருகின்றது.

இதுதொடர்பாக, தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட பதிவில், “கேரள முன்னாள் முதல்வர் தோழர் பினராயி விஜயன் அவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக மத்திய அமைப்புகள் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் போக்கு அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.

”பினராயி விஜயனை ஏன் இன்னும் பாஜக குறிவைக்கவில்லை?" என்று தொடர்ந்து கேள்வி எழுப்பிய சில காங்கிரஸ் தலைவர்களின் பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளின் உள்ளீடற்ற தன்மையை இது அம்பலப்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

ED Raids Pinarayi Vijayan's Residence: M.K. Stalin Condemns

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.