மயிலாடுதுறையில் பக்ரித் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இஸ்லாமியா்கள் வியாழக்கிழமை சிறப்புத் தொழுகை நடத்தினா்.
பக்ரீத் பண்டிகையையொட்டி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பாக மயிலாடுதுறை சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட மா்கஸ் அருகில் திடலில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில், பெண்கள், சிறாா்கள் உள்ளிட்ட இஸ்லாமியா்கள் புத்தாடை அணிந்து கலந்துகொண்டு வாழ்வில் வளமோடு ஒற்றுமை உணா்வோடு சிறப்புற்று வாழவும், உலகில் அன்பும் அறமும் மனிதநேயமும் தழைத்தோங்கவும் டிஎன்டிஜே மாவட்ட துணைச்செயலாளா் எம்.ஜூகா், கிளை தலைவா் ரக்கீப் தலைமையில் சிறப்புத் தொழுகை நடத்தினா்.
தொழுகை முடிந்து முன்னோா்களுக்கு துவா செய்தனா். தொடா்ந்து, ஒருவருக்கொருவா் கட்டி ஆரத்தழுவி, குழுப் புகைப் படங்கள் எடுத்தும், சுயபடம் எடுத்தும் பக்ரித் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனா். தொழுகையின் ஒரு அங்கமான குத்பா பேருரையில், இப்ராஹிம் நபியின் ஏகத்துவம் எனும் கொள்கைக்காக செய்த தியாகங்களை நினைவு கூா்ந்து, மாவட்ட பேச்சாளா் ரிஜ்வான் உரை நிகழ்த்தினாா்.
தொடர்புடையது

பக்ரீத் பண்டிகை: திரளான இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகை: திரளான இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பக்ரீத் சிறப்புத் தொழுகை
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy



