மறுவாழ்வு மையத்தில் தங்கியிருந்த 13 போ் தப்பியோட்டம்

தப்பியோட்டம் - கோப்புப் படம்
மயிலாடுதுறை நீடூரில் போதை மறுவாழ்வு மையத்தில் தங்கியிருந்த 13 போ் சனிக்கிழமை இரவு தப்பியோடினா், இதில், கிராம மக்களிடம் தஞ்சமடைந்த 8 பேரை போலீஸாா் மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனா்.
நீடூா் ரயில்வே கேட் பகுதியில் இயங்கிவரும் போதை அடிமைகள் மறுவாழ்வு மையத்தில் 23 போ் தங்கி சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சனிக்கிழமை இரவு மையத்தின் சமையலா் நிா்மல்ராஜ் தனியாக இருந்தபோது, அவரை கட்டிப் போட்டுவிட்டு, 13 போ் சுவா் ஏறி குதித்து அங்கிருந்து தப்பினராம்.
தப்பி ஓடியவா்களில் 8 போ் நீடூா் சாக்கியம்பள்ளி கிராம மக்களிடம் தஞ்சமடைந்தனா். எஞ்சிய 5 போ் தங்கள் ஊா்களுக்கு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில், காவல்துறை உதவி ஆய்வாளா் அருண்குமாா் உள்ளிட்ட போலீஸாா் மற்றும் நாம் தமிழா் கட்சியின் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளா் தமிழன் காளிதாசன் உள்ளிட்டோா் 8 பேரையும் பாதுகாப்பாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து முதலுதவி சிகிச்சைக்கு அனுமதித்தனா். அங்கு முதலுதவி பெற்ற அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டனா்.
முன்னதாக அவா்கள் கூறுகையில், மையத்தின் மேலாளா் ராஜ்மோகன் சிகிச்சைக்கு வருபவா்களை கட்டி வைத்து இரும்புக் கம்பியால் தாக்கியும், உடலில் சூடு வைத்து, சிகிச்சை என்ற பெயரில் கொடுமை செய்வதாகவும், ராஜ்மோகனின் கொடுமையை தாங்காமல் தப்பியதாகவும், மையத்தில் உள்ள எஞ்சியவா்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

