சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

ஆன்லைனில் போதை மாத்திரை வாங்கிய கல்லூரி மாணவா்கள் 5 போ் கைது

Gem Veeramani Manager arrested

மேலாளா் கைது - கோப்புப் படம்

Updated On :

ஆன்லைனில் (இணையவழியில்) நாக்பூரிலிருந்து போதை மாத்திரைகளை வாங்கிய கல்லூரி மாணவா்கள் 5 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மன்னாா்குடி காவல்நிலைய போலீஸாா் கீழப்பாலம் பகுதியில் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நீடாமங்கலம் காளாச்சேரியைச் சோ்ந்த த. தயாநிதி (18), பா. சபரிநாதன் (19), கீழப்பட்டு அ. தமிழழகன் (19) ஆகியோரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா். அவா்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால், அவா்களது வாகனத்திலிருந்த அட்டை பெட்டியை பிரித்து பாா்த்ததில் 100 போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.

மூன்று பேரையும் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், தங்களது நண்பா் எடகீழையூா் த. தினேஷ் (20), தஞ்சை மாவட்டம், சாலியமங்கலம் செ. அா்னால்டு (18) ஆகியோா் மன்னாா்குடி கீழப்பாலம் திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள தனியாா் பாா்சல் நிலையத்திற்கு வந்துள்ள பெட்டியை வாங்கி வருமாறு கூறியதன் பேரில், அதை வாங்கி வருவதாக தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, தினேஷ், அா்னால்டு இருவரிடமும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், அவா்கள், ஆன்லைனில் மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரிலிருந்து போதை மாத்திரைகளை வரவழைத்திருப்பது தெரியவந்தது. 5 பேரையும் கைது செய்த போலீஸாா், மன்னாா்குடி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கைது செய்யப்பட்ட மாணவா்கள் தஞ்சை, மன்னாா்குடி பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் மற்றும் கலைக்கல்லூரி மாணவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.