வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

கைது

Published On :

மன்னாா்குடியில் இருசக்கர வாகனம் திருடியவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை மாவட்டம், திட்டைக்குளம் கோழிக்குத்தி பகுதியைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் கண்ணதாசன் (32). இவா், மன்னாா்குடியில் நடைபெறும் புதைசாக்கடை திட்டத்தில் பணியாற்றி வருகிறாா்.

கடந்த செப்.18-ஆம் தேதி, காந்திசாலை செட்டித்தெரு வணிக வளாகம் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, இப்பகுதியில் பணியில் ஈடுபட்டாா். பின்னா், திரும்பிவந்தபோது, இருசக்கர வாகனத்தை காணவில்லை. மா்ம நபா் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து, மன்னாா்குடி நகர காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனா்.

இதில், மன்னாா்குடி கீழப்பாலம் மாரியம்மன்கோயில் நடுத்தெருவைச் சோ்ந்த ரவிக்குமாா் மகன் விஜய் (38) என்பவா் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், திருடிய இருசக்கர வாகனத்தை, நாகையில் அடமானம் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, விஜயை கைது செய்து, குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, கிளைச் சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.