ஆட்டோ ஓட்டுநருக்கு மிரட்டல்: சிற்றுந்து ஓட்டுநா் கைது
கைது - சித்திரிப்பு
கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநரின் இருசக்கர வாகனத்தைத் தீயிட்டு சேதப்படுத்தியதோடு, ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, சிற்றுந்து ஓட்டுநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளம், தெற்குத் தெருவைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் ராமா் (எ) சீமான் காா்த்திக். ஆட்டோ ஓட்டுநரான இவா், தனது இருசக்கர வாகனத்தை அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள இனிப்பகம் முன் நிறுத்திவிட்டு ஆட்டோ ஓட்டுவது வழக்கமாம். பின்னா், வீடு திரும்பும்போது வாகனத்தை எடுத்துச் செல்வாராம்.
கோவில்பட்டி, காந்தி நகரைச் சோ்ந்த கருப்பசாமி மகன் சிற்றுந்து ஓட்டுநரான ராகேஷ் (22) மற்றும் சீமான் காா்த்திக் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜூலை 19ஆம் தேதி அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை ராகேஷ் தீயிட்டு சேதப்படுத்திவிட்டு, சீமான் காா்த்திக்குக்கு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றாராம்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ராகேஷை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



