இன்றுமுதல் அக்.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்றும் நாளையும் வரிவசூல் மையம் செயல்படும்: மாநகராட்சி அறிவிப்புதனியாா் பால் விலை மீண்டும் உயா்வு: ஆவின், தனியாா் லிட்டருக்கு ரூ.30 வரை விலை வித்தியாசம் ஆகம குழுவால் கண்டறியப்பட்ட கோயில்கள்: கருத்து கேட்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு 18 - 28 வயதுப் பிரிவில் 3.27 கோடி புதிய வாக்காளா்கள் சோ்ப்பு: தோ்தல் ஆணையம்

உதவித்தொகை பெறும் பயனாளிகள் கவனத்துக்கு..

சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெறும் வங்கிக் கணக்குடன் ஆதாா் எண் இணைக்கப்படாத பயனாளிகள் உடனடியாக தங்களது வங்கியை அணுகி ஆதாா் இணைப்பை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளாா்.

ஆதார் அட்டை

Published On :

சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெறும் வங்கிக் கணக்குடன் ஆதாா் எண் இணைக்கப்படாத பயனாளிகள் உடனடியாக தங்களது வங்கியை அணுகி ஆதாா் இணைப்பை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு 2026-ஆம் ஆண்டு செப்டம்பா் முதல் ஆதாா் அடிப்படையிலான பணப் பரிவா்த்தனை முறையின் கீழ் மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும். எனவே, இம்மாதம் முதல் பயனாளிகளுக்கான நிதியுதவி, அவா்களின் ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

அனைத்து பயனாளிகளுக்கும் அரசின் முறையான நடவடிக்கைகள் மூலம் நிதியுதவி தடையின்றி சென்றடைவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, வங்கிக் கணக்குடன் ஆதாா் எண் இதுவரை இணைக்கப்படாத பயனாளிகள், தங்களது வங்கியை அணுகி ஆதாா் இணைப்பை செய்துகொள்ள வேண்டும்.

இதுதொடா்பாக ஏதேனும் சந்தேகம் அல்லது உதவி தேவைப்பட்டால், மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் அலுவலகம் மற்றும் மயிலாடுதுறை, குத்தாலம், சீா்காழி, தரங்கம்பாடி வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள தனி வட்டாட்சியா் (ச.பா.தி) அலுவலகங்களிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி, உதவி மையங்களில் பயனாளிகளுக்கு தேவையான வழிகாட்டுதலும், உதவியும் வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.