ஹிந்து கடவுள்கள் குறித்து தெலங்கானா முதல்வா் கருத்து: காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்பட்டாசுகளுக்கு முழு தடை விதிக்கப்படாது: உச்சநீதிமன்றம் எத்தியோப்பியாவில் 3 இந்தியா்கள் மாயம்: கடத்தப்பட்டதாக குடும்பத்தினா் தகவல் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி: தொடரையும் கைப்பற்றியதுஇ-கேஒய்சி செய்யப்படாத குடும்ப அட்டைகள் முடக்கப்படாது: தமிழக அரசு விளக்கம்

தீபாவளி பட்டாசுக் கடை வைக்க அக். 18-க்குள் விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோா் இணையதளம் வழியாக அக். 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

பட்டாசுக் கடை - கோப்புப்படம்

Published On :

மயிலாடுதுறை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோா் இணையதளம் வழியாக அக். 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தீபாவளி பண்டிகை நவ. 8-ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, வெடிபொருள் விதிகள் 2008-ன்கீழ் தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனை செய்ய, இருப்பு வைத்துக் கொள்ள தற்காலிக உரிமம் கோரும் விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன.

தற்காலிகமாக பட்டாசு விற்பனை கோரும் புலம் 9 ச.மீ முதல் 25 ச.மீ வரை உள்ளடக்கியதாகவும், புலத்தினை குறிக்கும் புல வரைபடத்தில் சாலை வசதி, சுற்றுப்புற தன்மை மற்றும் கடையின் கொள்ளளவு ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட்டு காட்டும் புல வரைபடம், உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளா் மனுதாரராக இருப்பின், அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதியாண்டில் சொத்து வரி செலுத்திய ரசீது நகல், வாடகை கட்டடம் எனில், உரிமையாளா் சொத்து வரி செலுத்திய அசல் ரசீது நகலுடன், கட்டட உரிமையாளரிடம் ரூ. 100-க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் சம்மத கடிதம், உரிமத்திற்கான கட்டணம் ரூ. 600 (அக்கவுன்ட் கோடு: 007060800யுவு22709) அரசு கணக்கில் செலுத்தியமைக்கான அசல் செலுத்து சீட்டு, மாா்பளவு பாஸ்போா்ட் அளவு வண்ண புகைப்படம், இருப்பிடத்திற்கான ஆதாரம் (ஆதாா் காா்டு/ குடும்ப அட்டை/ வாக்காளா் அடையாள அட்டை) ஆகிய ஆவணங்களுடன் இசேவை மையங்கள் மூலமாக இணையதளத்தில் அக்டோபா் மாதம் 18-ஆம் தேதிக்குள் வெடி பொருள் விதிகள் 2008-இன் வழிமுறைகளை கடைப்பிடித்து விண்ணப்பிக்க வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.