கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவிகிதமாக உயர்த்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநிலத் தலைவர் ஜெ.எஸ். ரிபாய்.
சீர்காழி வட்டம், சேந்தங்குடியில் தமுமுக கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் அஷ்ரப் அலி தலைமை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்று, ரிபாய் மேலும் பேசியது:
இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதமாக உயர்த்துவேன் என்று தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை தமிழக முதல்வர் நிறைவேற்ற வேண்டும்.
மதுவால் நாட்டில் கொலை, கொள்ளை, இளம்பெண்கள், சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர். இதுபோல் ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, மதுக்கடைகளை மூடுவதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
செயலர் அபுபக்கர் சித்திக், துணைத் தலைவர் எகையாகான், மாணவரணிச் செயலர் மைதீன்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பாளர் ராவுத்தர்ஷா, தமுமுக மாவட்ட நிர்வாகிகள் சபாபஷீர், முஜிபுதீன், ஆரீப், எருக்கூர் புகாரி, ஷாஜஹான், சீர்காழி ஒன்றியத் தலைவர் வஜிருதீன், மயிலாடுதுறை நகரச் செயலாளர் பி.எம். பாசித், சேந்தங்குடி கிளைப் பொருளாளர் பிலால், கிளைத் தலைவர் ஷேக்தாவூது உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.