முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடுத் திட்டத்தில் கல்லீரல், கணைய சிகிச்சைக்கு ரூ. 27 லட்சம் வரை சிகிச்சை பெறலாம் என்றார் மாநில மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால்.
வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முதல்வரின் விரிவான காப்பீடுத் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கிவைத்து அமைச்சர் மேலும் பேசியது:
உடல் நலத்தை பேணுவதில் கவனக்குறைவும், தயக்கமும் மக்களிடையே அதிகமாக உள்ளது. குறிப்பாக, கிராமப்புற பெண்கள் தங்களின் உடல்நிலை சார்ந்த பிரச்னைகளை வெளியில் சொல்ல தயங்கும் நிலை தொடர்கிறது. இதனால் கர்ப்பப்பை வாய் புற்று போன்ற நோய்களுக்கு காலத்தில் சிகிச்சை கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனர்.
இதை கருத்தில் கொண்டுதான் அரசே மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது. இதை மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
முகாமுக்கு நாகை மாவட்ட வருவாய் அலுவலர் எம்.ஆசியா மரியம் தலைமை வகித்தார்.
வேதாரண்யம் எம்எல்ஏ என்.வி. காமராஜ், தலைஞாயிறு ஒன்றியக் குழுத் தலைவர் தமிழ்வாணன், வட்டார மருத்துவ அலுவலர் ராசசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மருத்துவ, ஊரக நல இணை இயக்குநர் கிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர் மணிகண்டன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சண்முகராஜ், வட்டாட்சியர் ராம்குமார், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் வாசுதேவன், ஆத்மா குழுத் தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் காளிதாசன், ஊராட்சித் தலைவர் வனிதா நாகப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முகாமில் ரத்த தானம் அளித்த 10 பேருக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏற்றம் கண்ட மின்சார வாகனப் பங்குகள்!

ரூ. 184 கோடி மதிப்பிலான ஆர்டரை பெற்ற எச்எஃப்சிஎல்!

மேற்கு வங்கம்: தலைமைச் செயலராக மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி நியமனம்!

நாதகவை 'மற்றும் பலர்' என விமர்சித்த விஜய்: சீமானுடனான சந்திப்பு குறித்து சேரன் கருத்து!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
